சமந்தாவை பின்பற்றும் காஜல் – தமன்னா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார் சமந்தா. அவர் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக வைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

அவர் தற்போது விஜய் சேதுதியுடன் சூப்பர் டீலக்ஸ், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகையர் திலகம், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் ரங்கஸ்தலம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

.....

சமந்தா தனது உடலை பராமரிப்பதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக தனி சமையல் காரரை நியமித்திருக்கிறார். எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் தனது சமையல் காரரையும் உடன் அழைத்துச் செல்கிறார். இப்போது அதே பாணியில் நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் தங்களுடன் தனித்தனி சமையல் காரரை உடன் அழைத்துச் செல்கிறார்கள். வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றாலும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

Related Post