காதலியால் ஆணுறுப்பை வெட்டி எறிந்த காதலன்

சீனாவின் கலந்துரையாடல் சமூக தள செயலியான WeChat மற்றும் வீடியோ பகிர்வு சமூக தளமான Miaopai போன்றவற்றில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வரும் செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதில் பரப்பப்பட்டு வரும் செய்தி யாதெனில், காதலி தனது ஆணுறுப்பி சிறியதாக இருக்கிறது என்று கூறிய காரணத்தால் கல்லூரி மாணவர் தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டார் என்பதாகும்.

.....

இந்த சம்பவம் குறித்து இரத்த வெள்ளத்தில் பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டதாக கூறப்படும் ஆண் கீழ் சட்டை இன்றி காவலர் உதவியுடன் கல்லூரி வளாகத்தில் நின்றுக் கொண்டிருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது.

எந்த கல்லூரி?
இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் கல்லூரியின் பெயர் குவாங்டோங் பியசெங் காலேஜ். இது குவான்ஷோங் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் தான், காதலி ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று கூறியதால், தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டவர்.

யார் அந்த நபர்?
டீ-ஷர்ட் மட்டுமே அணிந்திருந்த நிலையில், கால்களில் இரத்தம் வழிய ஒரு வாலிபர் அந்த கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 10 செவ்வாய் கிழமை அன்று மத்திய நேரத்தில் வளாகத்தில் காணப்பட்டுள்ளார். இந்த செய்தி அறிந்தவுடன் அந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
¯?

என்ன நிலையில் இருந்தார்?
சம்பவம் நடந்த நாளில் அந்த கல்லூரி மாணவர் கல்லூரியின் டார்ம் ரூம் எனப்படும் ஓய்வறையில் தான் தங்கி இருந்துள்ளார். தனது காதலி ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று கூறிய காரணத்தால் அவர் இப்படியான முட்டாள்தனமான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த மாணவர் அந்த செயலின் போது குடி போதையில் எல்லாம் இல்லை. தெளிவான மனநிலையில் தான் இருந்தார் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

சுற்றறிக்கை!
தங்கள் கல்லூரியில் இப்படி ஒரு சம்வம் நடந்ததை அறிந்தவுடன், இது குறித்த படங்கள் மற்றும் வீடியோக்களை யார் எடுத்திருந்தாலும், அதை எங்கும், யாருடனும் பகிர வேண்டாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. ஆனால், அதையும் மீறி அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் படங்கள், வீடியோக்களை பரப்பிவிட்டனர்.

வைரல்!
கலந்துரையாடல் செயலியான WeChat மற்றும் யூடியூப் போன்ற சீன வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான Miaopaiவிலும் அந்த மாணவரின் படங்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த சமூக தளங்களில் பரவும் செய்திகளில் தான் அந்த மாணவர் தனது காதலி ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று கூறியதால் அவர் ஆணுறுப்பை கத்தரித்துக் கொண்டார் என்ற செய்து பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

கல்லூரி நிர்வாகம்!
ஆனால், அந்த மாணவர் ஏன் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார் என்பதற்கான உண்மை காரணம் தெரியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. சமூக தளங்களில் பரவி காரணம் உண்மையா? பொய்யா? என்று தெளிவாக அறியப்படவில்லை.

மனநலம்?
அந்த மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது மன ரீதியாக அழுத்தம் கொண்டிருக்கிறாரா என்பது அறியப்படவில்லை. இரத்தம் காலில் வழிந்து கொண்டிருக்கும் நேரத்திலும் கூட அவர் வழியில் துடிப்பது போல வீடியோக்களில் தென்படவில்லை. அவர் கல்லூரி வளாக காவலரின் உதவியோட, அவரது கைகளை பிடித்தவாறு நின்றுக் கொண்டிருப்பது போல தான் காட்சிகளில் தென்படுகிறார்.

உண்மை என்ன?
சமூக செயலி மற்றும் தளங்களில் காதலி கூறியதாக பதிவிட படும் காரணம் தான் உண்மையா? அல்ல கல்லூரி நிர்வாகம் கூறியது போல உண்மை காரணம் என்ன என்பது இதுவரை அறியப்படாமல் இருக்கிறதா? என்பதும் இதுநாள் வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Post