மாணவிகளை கற்பழித்த ஆசிரியர் தலைமறைவு

மேற்கு வங்காளம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிகளை கற்பழித்துவிட்டு தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்காளம் – அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிகளை கற்பழித்த ஆசிரியர் தலைமறைவு
கொல்கத்தா:

.....

மேற்கு வங்காளம் மாநிலம், வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவிகள் இருவர் இனி பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று பெற்றோரிடம் அடம் பிடித்தனர்.

அவர்களில் ஒரு சிறுமியின் பெற்றோர் துருவித்துருவி விசாரித்தபோது, இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பள்ளி நேரம் முடிந்த பிறகு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து 4 நாட்களாக தன்னையும் தன்னுடன் படிக்கும் இன்னொரு மாணவியையும் வகுப்பறையில் வைத்து தங்களை கற்பழித்து வந்ததாகவும், இதைப்பற்றி வெளியே சொல்ல கூடாது என்று அவர் மிரட்டி வைத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவியின் வீட்டுக்கு அந்த சிறுமியின் பெற்றோர் சென்று விசாரித்தபோது இந்த சம்பவம் உண்மைதான் என்பது தெளிவானது.

இரு மாணவிகளின் பெற்றோரும் இதுபற்றி நேற்றிரவு ராய்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளையும் இன்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு இன்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நான்காம் வகுப்பு மாணவிகளை கற்பழித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post