டியுசன் இல்லாது வேறு பள்ளி கூடங்கள் ஓடும் மாணவர்கள் – கொறட்டை விடும் முரசுமோட்டை தேர்தல் தொகுதி ..!

இலங்கை வடக்கு மாகணத்தில் அமைய பெற்றுள்ள முரசு மோட்டை தேர்தல் தொகுதிக்குள்
அமைய பெற்றுள்ள முரசுமோட்டை முருகானந்த கல்லூரியில் கலவி கற்கும் மாணவர்கள் பலர் தற்போது வேறு கல்வி
கூடங்கள் நோக்கி இடம்பெயருள் நிலை ஏற்பட்டு வருகிறது .

இங்கு அந்த மாணவர்கள் கல்வி கற்றிட மேலதிக டியுசன் வகுப்புக்கள் இல்லாத நிலையில் மத்திய நகரகாக விளங்கும் கிளிநொச்சி நோக்கி
நகர்ந்து சென்றே தமது மேலதிக கல்வியை மேற்கொண்டு வருகின்றனர் .

.....

இவ்வாறு நகார்ந்து செல்தல் ,சமுக சீர்கேடுகளை விளைவிப்பதுடன் ,மாணவர்கள் கல்வி நிலையில் தேக்கம் ஏற்படும் நிலையை உருவாக்கி விடுவதுடன் ,
பெற்றவர்கள் நீண்ட தூரம், சென்று கல்வியை தொடர அனுமதி மறுத்து வருகின்றனர் ,சிலரோ பல ஆயிரம் மாதம் போக்குவர்த்திற்கு செலவு
செய்தி பிள்ளைகள் கல்வியை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர் .

மேற்படி மாணவர்கள் மேலதிக கல்வியை முன்னிலை படுத்தி மேலதிக கற்றல் செயலை வழங்கிட முருகானந்த கல்லூரி இதுவரை எவ்வித நடவடிக்கை
களையும் மேற்கொள்ளவில்லை .
கூட்டமைப்பின் சார்பில் வெற்றியீட்டிய அந்த தொகுதி அமைப்பாளர் இதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர் .
தேர்தலில் வெற்றிஈடிய பின்னர் அவரும் உறங்கு நிலையில் உள்ளதான செயலை இது காண்பிக்கிறது .

அதைவிட புலம் பெயர்ந்து உருவாக்கம் பெற்றுள்ள முரசு மோட்டை ஒன்றியங்களும் இது தொடர்பாக ஆராய்ந்து அதற்கான செயல் ஊட்டங்களை
புரியவில்லை என அந்த பகுதி மக்கள் நமக்கு தெரிவித்துள்ளனர் .

வேளான் செய்கையை முன்னிலையாக உயர்ந்து நிற்கும் கிராமத்தில், கல்வி தர நிலையில் உயர்ந்து
நிற்கும் இந்த கல்லூரி ,இவ்விதம் தொடர்ந்து நீடித்து செல்லும் எனின்
பூர்விக மக்கள் குடிகள் வேறு இடங்கள் நோக்கி நகர்ந்து செல்வதை தடுத்திட முடியாத பெரும் நெருக்கடி நிலை
தோன்றும் என அந்த மக்கள் கவலையுடன் தமது குமுறல்களை கொட்டியுள்ளனர் .

இவர்களின் இந்த குரல்களை ,கூட்டமைப்பு த்தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஆவன செய்வாரா ..?
புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாக அந்த ஊரின் பெயரால் இயங்கி வரும் முரசுமோட்டை ஒன்றியங்கள்
செயல் படுத்துமா ..? என்ற கேள்வியே மக்களால் மனதில் முன்னிலை விரித்துள்ளது .

பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு சிறந்த கல்வி கூடம் திறன் வாய்ந்த மாணவர்களை இழக்கும் நிலை
உருவாக்கம் பெற்றுள்ளது .இதனை தடுப்பது யார் ..? பொறுப்பு கூரலில் உள்ளவர்களே உங்கள் பதில்கள் எதுவோ ..?
நேர்பட பேசி ,வெளிப்படை தன்மையுடன் செயலாற்றுங்கள் ,அதுவே ஆரோக்கியமானதாகும் என அந்த ஊர் மக்கள் கருத்தாக செறிந்து கிடக்கிறது .

– வன்னி மைந்தன் –

Related Post