6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது

ஒடிசாவின் களாஹாண்டி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு மாணவியை உறவினர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது
புவனேஷ்வர்:

.....

ஒடிசா மாநிலம் களாஹாண்டி மாவட்டத்தில் உள்ள துமேர்படார் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவில் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் உறவினர் முனா நாய்க் (35) சிறுமியை பலவந்தமாக தனது வீட்டிற்கு கடத்திச்சென்றார். அவளை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து இரண்டு நாள்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து சிறுமியை நேற்று இரவு முனா விடுவித்துள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும் சிறுமியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த முனாவை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் முனாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Post