கூகுள் தேடலில் இந்திய அளவில் டிரெண்டான பிரியா வாரியர்

மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடுமுழுவதும் இளைஞர்களை கவர்ந்து விட்டார்.

அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது.

.....

இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிமிக்கி கம்மல் பாடல், ஷெரிலை உச்சத்துக்கு கொண்டு சென்றது போல் ‘ஒரு அடார் லவ்’ பாடல் பிரியா வாரியரை அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசவைத்துவிட்டது. மனதை கவர்ந்த நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.

யார் இந்த பிரியா என்று பலரும் கேட்க, கூகுள் தேடல் பட்டியலில் பிரியா இந்திய அளவில் முதல் நபராகிவிட்டார்.

மாணிக்ய மலராய பூவி பாடலை மலையாள நடிகரும் பாடகருமான வினித் சீனிவாசன் பாடியுள்ளார். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன் ஆவார். உமர் லூலு இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற மார்ச் 3-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையே பிரியா வாரியரின் கண்சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த பாடலில் வரும் ‘புனித நகராம் மக்காவின் ராணியாக வாழ்வாள்’ என்ற வரி இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே நடிகை பிரியா வாரியர், பாடல் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து ஐதராபாத்தில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Post