சிறுமியை கற்பழித்த காமுகனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்துக்குட்பட்ட டோங்கேஷ்வர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சாயான்னா(43) என்னும் கூலி தொழிலாளி கற்பழித்து விட்டு தப்பிச் சென்றான்.

பின்னர், வீடு திரும்பிய தனது தாயாரிடம் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதையடுத்து, சாயான்னாவை கண்டுபிடித்த அக்கிராம மக்கள் அவரை கம்புகளாலும் கூரிய ஆயுதங்களாலும் சரமாரியாக தாக்கினர்.

.....

படுகாயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாயான்னா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நிஜாமாபாத் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன

Related Post