இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்

கொல்கத்தாவில் இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி அவரது கைரேகைகளை பயன்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன் கைது செய்யப்பட்டார்.

இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
கொல்கத்தா:

.....

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார். தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார். பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவருக்கு பென்சன் வந்து உள்ளது.

பினா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்த மகன் தாய் இறந்ததை வெளியே யாருக்கும் தெரிக்கவில்லை. பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்து உள்ளார். அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம் பென்சனை பெற்று உள்ளார்.

சமீபத்தில் போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில் இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.

சுபாபிரதா தனது தாய்க்கு வாழ்வதற்கு உரிய சான்றிதழைப் பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து உள்ளார்.

இது போல் தந்தை இறந்து விட்டால் அவரது உடலையும் பதப்படுத்தும் வகையில் அங்குள்ள பிரீசரில் இடம் இருந்து உள்ளது. ஏன் என்றால் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார்.

இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர்

Related Post