போதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்

சினிமா துறை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஒருசில நடிகர்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்கள்.

போஜ்பூரி சினிமா துறையில் பிரபலமான பவண் சிங் என்ற நடிகர் அக்‌ஷரா சிங் என்ற நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நடிகையை குடிபோதையில் ஹோட்டலில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.....

அவர்கள் இருவரும் சில்வாசா பகுதியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளனர். பிறகு Daman Ganga Valley Resortல் தங்கினர். அங்கு கடந்த வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு பவண் சிங் குடித்துவிட்டு ரூமை விட்டு வெளியே கிளம்பியுள்ளார். அதை வேண்டாம் என தடுத்த அக்‌ஷரா சிங்கின் முடியை பிடித்து இழுத்து அவரின் தலையில் சுவற்றில் இடித்துள்ளார். தடுக்க வந்த ரிசார்ட் பணியாளர்களுடனும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் அது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Related Post