சொத்து குவிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.2½ கோடி சொத்துகள் முடக்கம்

சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில் குமாருக்கு சொந்தமான ரூ.2.51 கோடி சொத்துகளை முடக்கி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.2½ கோடி சொத்துகள் முடக்கம்
பாட்னா:

.....

பீகார் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக இருப்பவர் செந்தில் குமார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மங்கர் மாவட்ட கலெக்டர் மற்றும் பாட்னா மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கட்டுமான நிறுவனங்களுக்கு வரைபட ஒப்புதல் மற்றும் அரசு ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் பெற்று சம்பாதித்ததாக செந்தில் குமார் மீது புகார் எழுந்துள்ளது. இந்த சொத்துகளை இந்திரா நினைவு கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட சில நிறுவனங்கள் மூலமாக அவர் வாங்கி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள், செந்தில் குமாருக்கு சொந்தமான ரூ.2.51 கோடி சொத்துகளை முடக்கி உள்ளனர். அதன்படி பாட்னாவில் உள்ள சில சொத்துகளும், அவரது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ள தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 35 சொத்துகளும் முடக்கப்பட்டன. மேலும் அவரது பெயர் மற்றும் அறக்கட்டளை பெயரில் தொடங்கப்பட்டு உள்ள 7 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.செந்தில் குமார் மீது ஏற்கனவே நிதி மோசடி தடுப்பு சட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post