பெண்கள் சந்திக்கும் தூங்கமின்மையால் உடல் நலப்பிரச்சனைகள்

பெண்கள் மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தூங்கமின்மையால் பெண்கள் சந்திக்கும் உடல்நலப்பிரச்சனைகள்
‘ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து.

.....

பல பெண்கள் வீட்டு வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக தூங்கவில்லை என்றால் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும். தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், ‘ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்’ (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு ‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக ‘தூக்கம்’ இருக்கிறது.

நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.

Related Post