வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.195 கோடி கருப்புப் பணம்

கர்நாடாக மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் 195 கோடி ரூபாய் கருப்புப் பணம் சிக்கியது. #blackmoney #fishprocessing

கர்நாடாகாவில் மீன் விற்பனையாளர்களிடம் ரூ.195 கோடி கருப்புப் பணம் – வருமான வரி சோதனையில் சிக்கியது
பெங்களூரு:

.....

கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளான மங்களூரு, உடுப்பி ஆகிய பகுதிகளில் தொழில் நடத்தும் மீன் மொத்த உற்பத்தியாளர்கள் மற்றும் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் வருமானத்தை மறைத்து கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பி வருவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, பெல்காம், பனாஜி ஆகிய பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் கடந்த 8-ம் தேதி சுமார் 150 அதிகாரிகளை கொண்ட தனிப்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 195 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது.

மீனவர்கள் என்ற பெயரில் சிலருக்கு கமிஷனாக பணம் தந்ததாக கணக்கு காட்டி, அந்த பணத்தை சீனாவில் உள்ள இடைத்தரகர்க்ள் மூலமாக துபாய், ஓமன், மொரீஷியஸ், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கு ஹவாலா முறையில் அனுப்பி வைக்கப்பட்டதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சோதனையின்போது கணக்கில் வராத 88 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்

Related Post