8 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.

ரூ.8 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு
ஜெய்ப்பூர்:

.....

ராஜஸ்தான் மாநில சட்டசபையில் இன்று 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட சபையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி மந்திரியும், முதல்-மந்திரியுமான வசுந்தரா ராஜே சிந்தியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், விவசாயக்கடன் 8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட்டில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். தனி நபர் விவசாயிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 650 கோடி ரூபாய் வரி குறைப்பிற்கும், சமூக நலத்திட்டங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை குறிவைத்து பட்ஜெட் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post