மனைவி ருசியாக சமைக்காததால் விவாகரத்து கேட்ட கணவர்

மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைக்காததால் விவாகரத்து கேட்ட கணவரின் மனுவை மும்பை ஐகோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மனைவி ருசியாக சமைக்காததால் விவாகரத்து கேட்ட கணவர்
மும்பை:

.....

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனு செய்திருந்தார். அதில், தன் மனைவி தாமதமாக எழுந்து சமைப்பதுடன், ருசியாக சமைப்பது இல்லை, தனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தர மறுக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு, நீதிபதிகள் தாதெட், சாரங் கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

‘மனுதாரரின் மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைப்பதும் கணவரின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்யாததும் கொடுமையான விஷயங்களாக தெரியவில்லை. அவர் மனைவி, அலுவலக வேலையுடன் சமையல் வேலையும் செய்துள்ளார்” என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Post