உடல் எடையை குறைக்கும் கொள்ளு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு சாதம்
தேவையான பொருட்கள்

.....

கொள்ளு – 1 கப்,
சீரகச் சம்பா அரிசி அல்லது வேறு ஏதானும் ஒரு அரிசி -1 கப்,
பெரிய வெங்காயம் -1,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
கடுகு – 1 தேக்கரண்டி,
[பாட்டி மசாலா] மல்லித்தூள் – 1 தேக்கரண்டி,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
நெய் – 1 தேக்கரண்டி.

செய்முறை :

கொள்ளுவை மலர வேக விடவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீரகச்சம்பா அல்லது வேறு அரிசியை உதிரியாக வேக விடவும், பின் ஆற வைக்கவும்.

வாணலியில் நெய் 1 தேக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மல்லித்தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வெந்த கொள்ளுவை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் ஆறிய சாதம் சேர்த்து கலக்கவும்.

கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Related Post