டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்

காலையில் சாண்ட்விச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்
தேவையான பொருட்கள் :

.....

வெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
வெள்ளரிக்காய் – 4
கோதுமை பிரட் துண்டுகள் – நான்கு

செய்முறை :

வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

இரண்டு கோதுமை பிரட் துண்டுகளின் நடுவில் வெள்ளரிக்காயை சிறிதளவு அடுக்கி வைக்கவும்.

சிறிது வெண்ணெய் எடுத்து பிரட்டியின் வெளிப்புறங்களில் தடவி கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த கோதுமை பிரட்டை வைத்து டோஸ்ட் செய்யவும். ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

கலர் மாறியவுடன் எடுத்து விட்டு குறுக்காக வெட்டி பரிமாறவும்.

குளுமையான வெள்ளரிக்காய் சாண்ட்விச் ரெடி!..

வெள்ளரிக்காய்க்கு பதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் வைத்துக்கொள்ளலாம்.

Related Post