சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #VeeramaDevi

குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.

.....

அதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.

கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இவர் இதுகுறித்து ஏற்கனவே நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post