சமூக வலைதளத்தில் புதிய உச்சத்தை தொட்ட சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யாவை சமூக வலைதளத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியதன் மூலம் சூர்யா புதிய உச்சத்தை தொட்டுள்ளார். #Suriya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, கடந்த 1997-ஆம் நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார், ப்ரெண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் அயன், சிங்கம், ஏழாம் அறிவு, பசங்க 2, 24 உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் சொல்லும்படமாக அமைந்தது.

.....

சமீபத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். சூர்யாவின் 36-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், டுவிட்டரில் சூர்யாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது. சூர்யா படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அகரம் என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் கல்விபெற முடியாத மாணவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post