டுவிட்டரில் 3.3 கோடி அபிமானிகள் – சிறப்பு வீடியோ போட்டு கொண்டாடிய ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை அவர் பதிவிட்டு வருகிறார். சில முக்கிய புகைப்படங்களையும் அவர் வெளியிடுகிறார். அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை இன்று 33 மில்லியனாக (மூன்று கோடியே முப்பது லட்சமாக) உயர்ந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அபிமானிகளுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார்.

.....

’டிவிட்டரில் என்னை பின்தொடரும் அபிமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால், எனக்கு நேரம் கிடைத்தது இல்லை. ஆனால், இன்று எனக்கு நேரம் கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது அடிமனதில் இருந்து அன்பான ஒரு செய்தியை அளிக்க விரும்புகிறேன். உங்களை எல்லாம் நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று தனது வீடியோ செய்தியில் ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

Related Post