கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையானார் ரவிகரன்

சட்டத்திற்கு முரணான மீன்பிடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு
மீனவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள்
காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டார்.

.....

பின்னர் முல்லைத்தீவு பதில் நீதவான் அவர்களுடைய இல்லத்தில்
காவல்துறையினரால் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை
செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

கடந்த 02.08.2018 (வியாழன்) அன்று முல்லைத்தீவு மீனவர்கள்
மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து
முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய
ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில்
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் 10.08.2018 (வெள்ளி) இன்றைய தினம் முல்லைத்தீவு
காவற்றுறையினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

விசாரணையின் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து
முல்லைத்தீவு பதில் நீதவான் திரு.த.பரன்சோதி அவர்களின் இல்லத்தில்
காவற்றுறையினரால் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் ரவிகரன் அவர்கள்
பிணையில் விடுதலைசெய்யப்பட்டார்.

Related Post