திருமுருகன் காந்தியை விடுதலை செய்-யாழில் வெடித்தது போராட்டம்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி இதனை ஏற்பாடு செய்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை திருமுருகன் கைது செய்யப்பட்டார்.

.....

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி ஜேர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Related Post