யாழில் உள்ள வாள்வெட்டு கும்பல்களின் புகைப்படங்களை வெளியிட்டது பொலிஸ்-கைது செய்ய உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களை அச்சுறுத்திவருகின்ற வாள்வெட்டுக்குளுக்களின் செயற்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை வடமாகாண முதலமைச்சரிடம் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கையளித்துள்ளார்

வாள்வெட்டுக்கும்பல் தொடர்பில் ஆராயும் பொருட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அழைப்பின்பேரில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ உள்ளிட்ட யாழ்மாவட்ட பொலிஸ் அதிகாராகளுடனான கலந்துரையாடல் ஒன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது

.....

இதன்போது வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வாள்வைட்டுக்கும்பல்கள் என அடையாளப்படுத்தப்பட்ட ஒருசிலரின் புகைப்படங்களை முதலமைச்சருக்கு வழங்கியதுடன் இவர்களில் ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

அத்துடன் மேலும் சிலரை கைதி செய்ய தாம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டதுடன்,இப்படங்களில் இருப்பவர்கள் தொடர்பில் தமக்கு பொது மக்களிடமிருந்து தகவல்களை பெற்றுத்தர உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்

Related Post