நாவற்குழி காணி விவகாரம்: சுமூக தீர்வுக்கான கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழி காணிப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு ஒரு நீண்ட தவணையை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

.....

நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் குடியிருக்கும் மக்களை அரச காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி குறித்த அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 34 பேருக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், நி.கேசாந் ஆகியோர் முன்னிலையானர்.

இதன்போது, குறித்த விடயம் வீடமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய அவர் கால அவகாசம் கோரியுள்ளார்.

அதற்கமைய அமைச்சரோடு பேசி சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணை ஒன்றை வழங்குமாறு நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதற்கமைய வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post