“ஓ.. மரணித்த வீரனே… உன் சீருடைகளை எனக்குத்தா“-ஈழத்து எழிற்சி இசையமைப்பாளர் மரணம்

ஈழத்தின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் சிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் பாடகருமான யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் கோலோச்சி வந்த யாழ் ரமணன் ஏராளம் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

“ஓ.. மரணித்த வீரனே… உன் சீருடைகளை எனக்குத்தா“ என்ற பாடல் யாழ் ரமணனின் பிரபல்யமான பாடலாகும்.

.....

இந்திய இராணுவக் காலப்பகுதியில் பல எழுச்சிப்பாடல்களை உருவாக்கி, போராட்ட அமைப்புக்களிற்கு பக்கபலமாக இருந்தார். அந்த சமயத்தில் அவரால் உருவாக்கப்பட்ட ராஜன்ஸ் இசைக்குழு வடக்கில் மிகப்பிரபல்யமான இசைக்குழுவாக இருந்தது.

பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார். அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா.. உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டு கழகத்துடன் இணைந்து, இசைப்பணியில் ஈடுபட்டிருந்தார். பிஞ்சு மனம், திசைகள் வெளிக்கும் போன்ற விடுதலைப்புலிகளின் படங்களிற்கு இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படங்களில் இடம்பெற்ற “ பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது“, “நீரடித்து நீரிங்கு விலகாது“ போன்ற பாடல்கள் என்றும் நிலைத்து நிற்பவை.

Related Post