வடமாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை முதலமைச்சர் உடன் தீர்க்க வேண்டும்-வடமாகாணசபையில் கோரிக்கை

வடமாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அமைச்சரவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

வடமாகாணசபையின் 129வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது

.....

இதன்போது வடமகாண அமைச்சர்கள் யார் என்பது தொடர்பில் அண்மைகாகலமாக எழுந்ள்ள சர்ச்சையினால் மாகாண அமைச்சிற்குட்பட்ட விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டள்ளது,எனவே வடமாகாணத்தின் அமைச்சர்கள் யார் என்பதை தெளிவு படுத்துமாறு வலியுறுத்தி எதிர் கட்சி தலைவர் சின்னத்துரை தவரசா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்

இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் உறுப்பினர்ளுக்கிடையில் கடுமையான வாதப்பிரி வாதங்கள் இடம்பெற்றன

குறித்த வாதம் இடம்பெறம்வெளை முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் சபையில் பிரசன்னமகியிருக்கவில்லை அத்துடன் முதலமைச்சர் தவிர்ந்த மீதவுள்ள நான்கு பேரையும் அமைச்சர்கள் என குறிக்கும் பெயர்ப்பலகை இன்றையதினம் அகற்றப்பட்டிருந்தது

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் போக்குவர்து அமைச்சர் டெனீஸ்வரன் ஒரு சில நிபந்தனைகளை வடமாகாண முதலமைச்சர் நிறைவேற்றவேண்டும் என தெரிவித்தார்

இவ்விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது வடமாகாண முதலமைச்சர் உரிய ஆலோசனையினை பெற்று ஆளுனரினூடாக இந்p பிரச்சனையினை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளும் தரப்பினரால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்படடு அவைத்தலைவரினால் அது வாசிக்கப்பட்டது

Related Post