யாழில் வாள்வெட்டுக்கும்பல்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய திட்டம்-வடமாகாண ஆளுனர்

யாழ் குடாநாட்டில் மக்கள அச்சுறுத்திவரம் சட்டவிரோத கம்பல்களை கட்டுப்படுத்த சட்டத்துறையை சேர்ந்தவர்களையும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றினைத்து விசேட கட்டமைப்பு ஒன்று உருவாக்க தாம் நடவடிக்கை எடு;திருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையினை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் இன்று யாழ் சுண்டுக்குழிளிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

.....

வுடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் சர்வ மதத் தலைவர்கள் புத்திஜீவிகள் என சகல தரப்பினரும் கலந்துகொண்டனர்

இந்த கலந்துரையாடலில் அரச உயர் அதிகாரிகளினாலும் சமூக பிரதிநிதிகளினாலும் மதத் தலைவர்களினாலும் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக தென்மராட்சி கெற்பலி தனங்களப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும். குடியிருப்பாளர்கள் அற்ற வீடுகளில் இடம்பெறும் கலாச்சார மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் நாவற்குழி கரையோரத்தினை அண்டிய பகுதியில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஆ;துடன் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ள வாள்வெட்டுக்கும்பல்களின் நடமாட்டம் தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்;டதுடன் இதை கட்டுப்படுத்த ஆளுனர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவம் இங்கு வலியுறுத்தப்பட்டது

வன்முறை மற்றும் சமூக சீரழிவுகளை தடுப்பதற்காக சமூக பிரதிநிதிகளையும் மதத் தலைவர்களையும்இ அதிகாரிகளையும்இ சட்டத்துறையை சேர்ந்தவர்களையும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றினைத்து கட்டமைப்பு ஒன்று உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அதற்கான முன் ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் றெஜினோல்ட் குரே இங்கு குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்

Related Post