யாழ் சிறைச்சாலையில் கிடைத்த தகவல்: வவுனியா இளைஞன் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் வவுனியாவில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 3 கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

.....

கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் யாழ்ப்பாணப் பிராந்திய போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வவுனியாவில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இளைஞர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணப் பிராந்திய போதை ஒழிப்புப் பிரிவினரால் இரவு 7மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதி வீடு ஒன்றினை சோதனை செய்த போது 3 கிலோ 900கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Post