முறையற்ற சிகிச்சை ஆசிரியரின் உயிர் பறிபோனது மட்டுநகரில் துயரம்
களுதாவளையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரும் பெரியகல்லாறு மெதடிஸ் மிசன் பெண்கள் பாடசாலை ஆசிரியையும் சமூக சேவையாளரும் இறை பக்தருமான திருமதி.உதயலெட்சுமி கணேசன் (53வயது)காது கேட்டல் குறைவு எனும் காரணத்திற்காக காது,மூக்கு, தொண்டை விசேட வைத்தியநிபுணரிடம் பரிசோதித்ததில் காதின் உட்பகுதியில் மென்சவ் வளர்ந்துள்ளது அதனை அகற்ற சிறு சத்திரசிகிச்சை செய்தால் சரியாகிவிடும் எனும் ஆலோசனைக்கு அமைய ஆசிரியை வைத்திய நிபுணரின் கண்கானிப்பிற்குரிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியான 2ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை(07/08/2018) 10.30மணிக்கு சத்திரசிகிச்சை நடைபெற்று சத்திரசிகிச்சை கூடத்தை விட்டு பகல் 12 மணிக்கு வெளியேறி மீண்டும் அதே விடுதியில் (Ward-2)இல் சேர்த்து அங்கு பார்வையிட சென்ற ஆசிரியையின் மகளிடம் விடுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளார்கள் மயக்கமருந்து கொடுத்துள்ளதால் கண்முழிக்க மாலை 4மணியாகும் என கூறியதையடுத்து மகள் அம்மா எப்பொழுது கண்விழித்து பார்ப்பார் நாம் கொண்டுவந்த மெல்லிய உணவை கொடுப்பது என ஏக்கத்துடன் தாயின் முகத்தை வைத்த கண் எடுக்காதவாறு பார்த்துக்கொண்டிருந்த மகளுக்கு தாயில் சிறிய அசைவோ சுவாசமோ நீண்ட நேரமாக இல்லாததை அறிந்து ஏனெனில் மகளும் ஒரு பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர் அல்லவா தனது தாயின் உடல் அவதானத்தில் எந்த ஒரு அசைவின்றி தொடர்ந்து கோமா நிலையிருந்ததை கண்டுபிடித்து பதற்ற மடைந்தவாறு விடுதியிலுள்ள தாதிய உத்தியோகத்தருக்கு அறிவித்து வைத்திய விடுதியில் எந்த ஒரு வைத்தியரோ, வைத்தியநிபுணரோ இருக்கவில்லை எல்லோரும் தமது தனியார் வைத்தியசாலையில் உழைக்க சென்றுவிட்டார்கள் போல அத்தோடு அவ்விடுதியில் முதலுதவி சிகிச்சை கூட தயார் நிலையில் இல்லை ஒட்சிசன் கொடுக்க ஒட்சிசன் சிலிண்டர் கூட முன்னேற்பாடாக இல்லை சத்திரசிகிச்சை செய்து வந்த இவ் ஆசிரியை கொஞ்சம் கூட நோயாளியை அவதானிக்க கூடிய நாடித்துடிப்பு, குருதியமுக்கம்,சுவாச வீதம் பரிசோதிக்காமல் எல்லோரும் அதாவது வைத்தியநிபுணர் உட்பட மொத்த உத்தியோகத்தரும் படுகொலை செய்துவிட்டார்கள்.

இவ் மரணத்திற்கான காரணத்தை நாம் வைத்திய நிபுணரிடம் வினாவினால் தடுமாற்றமான பதிலாக மாரடைப்பு என்கின்றார் சிலர் மயக்க மருந்து அதிகம் கொடுத்ததாக இன்னுமொரு காரணம் இப்படி அநியாயமாக இவர்களின் கவனயீனத்தால் கல்வியறிவு கூடிய குடும்பமான எமது உறவினரை ஏமாற்ற முடிந்த இவர்களால் சாதரணமான கிராம மக்களை எவ்வளவு சுலபமாக ஏமாற்றுவார்கள் என்பதை பொதுமக்களாகிய நாம் இப்படுகொலையிருந்து பட்டறிவு பெற முடியும்.இவ்மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் போலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் போலிசாரும் ஏமாற்றுவார்கள்.ஏனெனில் இலங்கையை பொருத்தவரை மருத்துவ விடுதியில் நடைபெற்ற மரணங்களுக்கு இதுவரை உறுதியான தீர்ப்பு கிடைக்கவில்லை.என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

.....

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை பொருத்தவரை இப்படி தான் வெளியாகிய டொக்டர் தொடங்கி நிபுணர் வரை எல்லோரும் தனியார் வைத்தியசாலையான பைனியர், ஜீவி, வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி,கல்முனை, காத்தான்குடி,அக்கரைப்பற்று என ஒவ்வொரு தனியார் கிளினிக் நிலையத்தில் கிடப்பதால் அரச வைத்தியசாலையான மட்டக்களப்பு வைத்தியசாலை விடுதிகளில் கவனிக்க வைத்தியரின்றி அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளி உயிரை அழிக்க துணை போகுன்றார்கள்.

Related Post