சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு கிளிநொச்சி மக்கள் அசெளகரியம்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மக்கள் அசெளகரியம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமுர்த்தி அலுவலகஙங்கள் மற்றும் வங்கிகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது.பெருமளவு மக்கள் சேவை பெறுவதற்கு வருகை தந்து திரும்பி செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.வயது முதிர்ந்தவர்கள் கூட சுட்டெரிக்கும் வெயிலில் வந்து சேவை பெறாது திரும்பி செல்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
ஒய்வுதிய உரித்துனை உடன் உறுதிப்படுத்துதல்,சமுர்த்தி நிதியங்களை வங்கிகளில் தலையிடாமல் இருத்தல், பதவியுயர்வு விதிமுறைகளை உடன் நடைமுறைப்படுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post