மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு ராயகடா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறுவனின் வாக்குமூலத்தையும் தாண்டி 21 பேரை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

.....

மேலும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், ஒருவேளை அபராதம் கட்ட முடியாமல் போனால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

Related Post