பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.....

Related Post