யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியாக்க சிங்கள நூல்கள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது


சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் யாழ் பல்கலைக்களகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமிநாதன் விமல் அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்ட கௌஷல்ய குமாரசிங்ஹவின் ‘இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்’ எனும் நாவல் மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் ‘மகர தோரணம்’ என்னும் சிறுகதைந}ல் மற்றும் கொழும்பு கல்கலைக்கழக ஊடக பட்டதாரி சிவலிங்கம் அனுஷானல் மொழிபெயர்க்கப்பட்ட நிஷ்ஷங்க விஜேமான்னவின் தாரா ஷியாமலீ குமாரசுவாமி என்னும் நாவல் ஆகிய நூல்கனே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது

.....

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமிநாதன் விமல் தலைமையில் பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் பிரபாத் ஜெயசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்நூற்களை அறிமுகம் செய்து வைத்தார்

திறந்த பல்கலைக்கழக பேராசிரிளர் கலாநிதி அத்துலசிறி சமரக்கோன் மற்றும் பேரானை பல்கலைக்களகத்தின் பேராசிரியர் கலாநிதி சுமதி சிவமோகன் ஆகியோர் மேற்படி நூல்கள் தொடர்பில் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்

பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும்யாழ் மாவட்ட இலக்கிய வட்டத்தினை சர்ந்த பெரம் எண்ணிக்கையிலானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Related Post