மானிப்பாய் வயோதிப பெண்கொலைவழக்கின் சந்தேகநபர் நீதிமன்றால் விடுதலை-மனநலம் பாதிக்கப்பட்டவராம்

மானிப்பாயில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

“சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கொலைச் சம்பவ தினத்தன்று கொலையாளி வீட்டுக்குள் நுழைவது – வீட்டிலிருந்து வெளியேறுவது பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் இவர் இல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. எனவே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.

.....

பொலிஸாரால் சந்தேகநபருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் சட்டத்தரணி சுகாஷின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்று சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்தது.

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்து அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட வயோதிபப் பெண் கடந்த மாதம் 28ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

மானிப்பாய், சங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி (வயது -60) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

“பிச்சை கார் போல் வந்த நபர் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்து தப்பி சென்று விட்டார்.

முதலில் ஒருவர் தர்மம் எடுப்பது போல் வந்து நோட்டம் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அவருக்கு தர்மம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் மீண்டும் அந்த வீட்டுக்குள் புகுந்து இந்த கொலையைச் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடமாடிய மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

அந்த நபர் இன்றுவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போதே சட்டத்தரணி சுகாஷின் சமர்ப்பணத்தை ஏற்று சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்து மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திவிட்டு கொலையாளியைக் கைது செய்யாமல் மானிப்பாய் பொலிஸார் தவறிழைத்துவிட்டனர் என முதல்வன் ஏற்கனவே எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post