யாழில் காதலன் ஏமாற்றியதால் காதலி தற்கொலை-பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காதலன் ஏமாற்றிய நிலையில் தவறான முடிவெடுத்த யுவதி ஒரு வகை நச்சுவிதையினை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிரலையில் நேற்றுமுன்தினம்(15) உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சாந்தை பண்டத்தரிப்பு பகுதியினை சேர்ந்த திருச்செல்வம் வசியகலா வயது(21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். நீண்டநாட்களாக இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இளைஞன் ஏமாற்றிய நிலையில் நேற்றையதினம் தவறான முடிவெடுத்துள்ளார்.

.....

உடனடியாக பெற்றோர் பிரதேச வைத்தியசாலை ஒன்;றில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் (15) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Post