யாழ் கோட்டைக்குள் மனித எலும்புக்கூடுகள் மீட்பு-மனிதப்புதைகுளியாக இருக்க வாய்ப்பு

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் தொல்பொருள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணியின் போது எலும்புத் துண்டுகள் சில ஒன்று மீட்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் அதுதொடர்பில் தமக்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

.....

தொல்பொருள் திணைக்களத்தினரிடம் தகவலைப் பெற முடியாதுள்ளதால் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

யாழ்ப்பாணம் கோட்டையின் மத்திய பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. இதன்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை எலும்புத்த துண்டுகள் சிலவும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவராத வகையில் மூடிமறைகப்பபட்டுள்ளன என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்தே இந்த சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று (16) திங்கட்கிழமை இந்த விடயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனையடுத்து அங்கு விரைந்த செய்தியாளர்கள் சிலர் அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்துக்கு செல்ல முடியாமல் திரும்பினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் தொடர்புகொண்ட போது, அவர்கள் தமக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை என மறுத்துவிட்டனர்.

இந்த தகவலை தொல்பொருள் திணைக்களத்திடம் உறுதிப்படுத்த முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.

Related Post