நிர்வாண காட்சியில் நடிக்க கணவர் ஆதரவு – நடிகை பேச்சு.

மலையாள படமான செக்சி துர்கா மற்றும் வெப் தொடரான மெக் மாபியா ஆகியவற்றின் மூலம் ஒரு பரபரப்பு நடிகையாக அறியப்பட்டவர் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. நவாஸுதீன் சித்திக்கிற்கு மனைவியாகத் சேக்ரெட் கேம்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தொடரின் சில காட்சிகளில் அவர் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருப்பதால், அந்தக் காட்சிகளை வைத்து அவர் ஓர் ஆபாசப் பட நடிகை என சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள்.

.....

இந்த நிலையில் இதுகுறித்து அவர் பேட்டியளித்ததில் “இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில் எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லை. இதுபோல இன்னொரு படத்தில்கூட நடித்திருக்கிறேன். ஆனால் அது பற்றிய தகவல்களை இப்போது கூற விரும்பவில்லை.

இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட அந்தக் காட்சி ஓர் உணர்வுப்பூர்வமான காதல் காட்சி. எனவேதான் அதில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் அதை தவறாகச் சித்தரித்து வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவ்விவகாரத்தில் எனது கணவர் எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

எனக்கு ஓகே என்றால் எதில் வேண்டுமானாலும் நடித்திட சம்மதம் கூறியுள்ள அவர், அது ஒரு நிர்வாணக்காட்சியாக இருந்தாலும்கூட என்னிடம் சம்மதம் கேட்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

Related Post