உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.....

இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Post