காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அடுத்த நடமாடும் சேவை கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்,கிளிநொச்சி மாவட்டத்திற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கடந்த மே மாதம் முதல் மாவட்ட ரீதியான பொதுமக்கள் சந்திப்பை ஆரம்பித்திருந்தது ஏற்கனவே மாத்தறை,மன்னார்,முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலந்துரையாடல் கூட்டுறவு மண்டபத்திலும் யாழ் மாவட்டத்திற்கான கலந்துரையாடல் வீரசிங்கம் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.இந்த அலுவலகம் தமக்கு வேண்டாம் இது வெறும் கண்துடைப்பு அலுவலகம் மாத்திரமே இவ்அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என காணாமல் போனவர்களின் உறவுகள் இந்த அலுவலகத்தின் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related Post