இலங்கையில் மீண்டும் மரண தண்டனை!- அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்

இலங்கையில் மரண தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

.....

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்பட்டு, இருவருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

ஆனால், குறித்த இருவரும் பயிற்சியின் பின்னர் கடமைக்கு சமூகமளிக்காததனால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

Related Post