பாதுகாப்பை உறுதி படுத்துங்கள் – கிளிநொச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சி – கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

.....

பாடசாலைக்கு இன்று வருகை தந்த மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மைதானத்தில் கூடி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலையில் கற்கும் மாணவிகள் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று திரும்புகையில் பாடசாலை மைதானத்தில் இருந்த சிலர் மேற்கொண்ட சிலர் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன் போது, காயமடைந்த சிறுமியொருவரின் தந்தை குறித்த பகுதயில் நின்ற இளைஞர்களை எச்சரித்துள்ளார்.

எனினும், குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் குழுவொன்று வீட்டை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலையின் பழைய மாணவர்கள் என தெரிவிக்கும் சில இளைஞர்கள் போதைப்பொருட்களை பாவிப்பதுடன், இவ்வாறான தகாத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மிக விரைவில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கியதையடுத்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Post