இரட்டை பிரஜாவுரிமை உள்ள யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு நீதிமன்றம்தடை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டதான வேலும்மயிலும் – குகேந்திரன் எதிர் வரும் ஓகஸ்ட் – 03ம் திகதிவரை சபை அமர்வுகளில் அமரவோ வாக்களிக்கவோ முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஈ.பீ.டீ.பி சார்பில் அங்கம் வகிக்கும் வேலும்மயிலும் – குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது. என்ற காரணத்தினால் குகேந்திரனின் உறுப்புறுமை செல்லுபடியற்றது . என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

.....

யாழ்ப்பாணம் மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் வேலும்மயிலும் – குகேந்திரன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வுகளில் அமரவோ அல்லது வாக்களிக்கவோ இடைக்கால தடை விதித்ததோடு குறித்த வழக்கினை எதிர்வரும் 3ம் திகதிக்கு ஒத்திவைத்தது.-

Related Post