சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கராவின் உருவச்சிலையை திரைநீக்கம் செய்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின் உருவச்சிலையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் திறந்து வைத்தார்.

.....

சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்களுக்கு அதியுயர் கௌரவத்தை அளிக்கும் வகையில், ஜனாதிபதி அலுவலகத்தினதும் அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தினதும் நெறிப்படுத்தலில் இந்த உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்களின் உருவச்சிலையை திறந்துவைத்த ஜனாதிபதி, உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தர்மசேன கஹதவ வரவேற்புரை ஆற்றியதுடன், அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் நிகழ்வில் உரையாற்றினார். அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி ஏ.பி.ஏ.குணசேகர கருத்து தெரிவித்தார்.

சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்கர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Post