வடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே: மனோ கணேஷன்

அரசியல் ரீதியில் வடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

.....

செங்கலடியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அடுத்து சிரேஷ்ட அரசியல்வாதி நான் தான் என கூறினார். எனினும் வடக்கு முதலமைச்சர் வயதில் மூத்தவராக இருந்தாலும் அரசியல் ரீதியில் நானே மூத்தவன் என தெரிவித்தார்.

மேலும் கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அனைத்து மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இனியாவது அமைச்சராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post