முல்லைத்தீவில் கள்ளமாடு கடத்தலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கள்ளமாடுகளை வெலிஓயா ஊடாக திருகோணமலைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் துப்பாக்கிசூடு நடத்தி முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். இரண்டு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளாதாக முள்ளிவளை பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

.....

இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் மேலும் தெரிவிக்கையில் (09.07.18) அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவளை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து கள்ளமாடுகள் ஏற்றப்பட்டு கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 05 மாடுகள் கப் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு அதில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒத்துளைப்புடன் இரண்டு நபர்கள் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் நாயாற்று பாலத்திற்கு அண்மித்த கோம்பாவில் சந்தி பகுதியில் கொக்கிளாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை இரவு 11.00 மணியளவில் மறித்துள்ளார்கள்.

இதன்போது குறித்த வாகனம் நிக்காமல் சென்றுள்ளது வாகனத்தில் சில்லுக்கு துப்பாக்கி சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளதுடன் அதில் இருந்த இரண்டு நபர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.

இந்த மாடு கடத்தலுக்கு துணைபுரிந்த யாழ்ப்பாணத்தினை சொந்த இடமாககொண்ட புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

குறித்த வாகனமும் 05 மாடுகளும் கைதான பொலீஸ் அதிகாரியும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளியவளை பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

Related Post