வடக்கை தொடர்ந்தும் மத்திய அரசாங்கம் இராணுவக்கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கின்றது-கனேடிய தூதுவரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பு

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் ஆகும் நிலையிலும் தொடர்ந்து வடக்கை மத்திய அரசு தனது இராணுவக்கட்டுப்பாட்டிலே வைத்திருப்பதா கனேடிய தூதுவரிடம் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கின்னன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்

.....

யாழ் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமைகள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தப்பட்டால் இனப்பிரச்சனை தீர்க்கப்படுமா என கனேடிய தூதுவர் முதலமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்

இதற்கு பதிலழித்த முதலமைச்சர்,கடந்த காலங்களைப்போல பெரும்பான்மையினத்தினர் எம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கவே முயற்சிக்கின்றனர், மத்திய அரசு வடக்கை தமது கட்டுப்பாட்டிற்குள்தான் இன்றும் வைத்திருக்கின்றது,ஒன்றரை லட்சம் இராணுவத்தினரை வடபகுதியில் உள்ளனர்,அதேபோல சகல தரப்பினரும் எம்மை கட்டுப்படுத்தவே நினைக்கின்றனர்,சட்டங்களும் எமக்கு எதிராக இருக்கின்றன

இவ்வாறான கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான தீர்வினை எட்டுவது கடினம் ,இவ்வாறானதொரு சூழலில் எதுபோன்றnhரு அரசியல் யாப்பை அவர்கள் ஏற்படுத்தப்போகிறார்கள் என எனக்கு தெரிவயவில்லை

ஆனால் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் யாப்பொன்றை ஏற்படுத்துவதுதான் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும் எனவும் முதலமைச்சர் இங்கு தெரிவித்தார்

Related Post