மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

தி.மு.க. செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அங்குள்ள பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.

முன்னதாக, தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது குறித்து கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என கூறியபடி சென்றார்.

லண்டனில் அவர் ஒரு வாரம் தங்கியிருந்து மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

.....

Related Post