செல்பியால் உயிரிழந்த மலைப்பாம்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்புடன் கிராம மக்கள் பல்வேறு விதமாக செல்பி எடுத்துக்கொண்டதில் மலைப்பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது.

செல்பியால் உயிரிழந்த மலைப்பாம்பு – வனத்துறையினர் விசாரணை
கொல்கத்தா:

.....

இன்றையை ஸ்மார்ட்போன் உலகில் செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே வருகிறது.

செல்பி மோகத்தால் மனிதர்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது அதே செல்பி மோகம் உயிரினங்களையும் மரணிக்க செய்கிறது. மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் அதனுடன் பல்வேறு விதமாக செல்பியை எடுத்துள்ளனர்.

செல்பி எடுப்பதற்காக பாம்பினை மிக மோசமாக கையாண்டதால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்துப்பகுதியை பிடித்த வண்ணமும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Post