காதலருடன் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இன்று ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

.....

மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.


நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், ஜூலை மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.

Related Post