ஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம், பகிச்சா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலியுடன் பெண் ஒருவரை அனுமதிக்க உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை சிகிச்சைக்காக அனுமதிக்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், வேறு வழியின்றி அவர்கள் வந்த ஜீப்பிலேயே அந்த பெண்ணுக்கு அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சிகிச்சைக்காக அந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

.....

Related Post