குஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி

குஜராத் மாநிலம், பவாநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அம்ரேலி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு ஒரு லாரி மூலம் நேற்றிரவு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அம்ரேலி மாவட்டம், ரஜுலா நகரில் உள்ள ஓடைப் பாலத்தின் வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் சுவற்றை உடைத்து கொண்டு ஓடை நீரில் விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

.....

காயமடைந்த 24 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Post